கல்லாப்பெட்டியில் இருந்த 4.50 லட்சம் பணத்தை திருடி சென்ற நபர்கள்...

அரிசி கடையை உடைத்து கல்லாப்பெட்டியில் இருந்த 4.50 லட்சம் பணத்தை திருடி சென்ற நபர்களை போலீசார் கைது செய்தனர்.

கல்லாப்பெட்டியில் இருந்த 4.50 லட்சம் பணத்தை திருடி சென்ற நபர்கள்...

சென்னை | மயிலாப்பூரில் உள்ள டாக்டர் ரங்கா ரோடு பகுதியில் வசித்து வருபவர் பால்ராஜ். இவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் கடந்த 25 ஆண்டு காலமாக அரிசி கடையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்றைய முன் தினம் இரவு வழக்கம் போல் 9  மணிக்கு மேலாக கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். 

இதனை அடுத்து நேற்று காலை வழக்கம் போல கடையை திறப்பதற்காக வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்த மயிலாப்பூர் காவல் நிலையத்தில் பால்ராஜ் புகார் மனு அளித்துள்ளார். 

புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அருகில் இருக்கக்கூடிய சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து தரமணி பகுதியை சேர்ந்த விஷால் (18) மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் (17) ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.  

மேலும் அவர்களிடமிருந்து இரு சக்கர வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க | தனியார் பேருந்தில் மோதி இளம்பெண் உயிரிழப்பு...