3 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்... 61 வயது முதியவருக்கு 29 ஆண்டுகள் சிறை...

கரூரில் 3 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த 61 வயது முதியவருக்கு 29 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து, கரூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

3 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்... 61 வயது முதியவருக்கு 29 ஆண்டுகள் சிறை...

கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த 61 வயதான கணபதி, தமது வீட்டில் அவ்வப்போது பூஜைகள் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். அதே பகுதியில் தந்தையை இழந்த 14, 15 மற்றும் 17 வயதுடைய சகோதரிகளான 3 பேரும், கணபதி நடத்தும் பூஜைகளுக்கு சென்று வந்துள்ளனர். 

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக சிறுமிகள் 3 பேரையும் தனித்தனியே வரச்சொல்லி, அவர்களுக்கு தீர்த்தம் மற்றும் பொங்கலை கணபதி கொடுத்துள்ளார். அப்போது, சிறுமிகளுக்கு தனித்தனியே பலமுறை பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.  

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், போக்சோ, பெண்கள் வன்கொடுமை, ஆபாசமாக திட்டுதல், கொலை மிரட்டல் ஆகிய 4 சட்டங்களின் கீழ் கணபதியை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த கரூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம், பாலியல் ரீதியாக சிறுமிகளை துன்புறுத்தியதற்காக கணபதிக்கு 29 ஆண்டுகள் மற்றும் 3 மாதம் சிறை தண்டனையும், 2 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.