கர்நாடகா: பெங்களூரு நகரில் இன்று அதிகாலை மேக்ரி சர்கில் என்ற பகுதியில் சுமன் என்ற இளைஞர் தனது இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, தவறான பாதையில் சென்றிருக்கிறார்.
சாலையின் மறுபுறம் யூடெர்ன் செய்ய முயற்சி செய்திருக்கிறார் அவர். அப்போது எதிரே வந்த லாரியில் மோதியுள்ளார். அதில் இருந்து மீள முடியாத வகையில் தனது வண்டியுடன் மாட்டிக் கொண்டார்.
அப்போது, லாரி சக்கரங்களில் தனது இரு சக்கர வாகனத்துடன் இளைஞர் சிக்கி கொண்ட நிலையில், லாரி ஓட்டுநர் பிரேக் பிடித்தும் லாரி நிற்காமல் சுமார் 300 மீட்டர் வரை அவரை இருசக்கர வாகனத்துடன் இழுத்துச் சென்றுள்ளது.
அந்த வேகத்தில், தார் சாலையில் கீரி, இரு சக்கர வாகன தீப்பிடித்து கொண்டதால் அதோடு லாரியும் முழுவதுமாக எரிந்து நாசமானது. இந்த விபத்தில் இளைஞர் பரிதாபமாக சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம், ஒரு பெட்ரோல் பங்கின் வாசலில் நடந்ததால், தீ பரவி விடுமோ என்ற பதற்றம் நிலவியதைத் தாண்டி, அந்த பங்கில் இருந்த கேமராவில் இச்சம்பவம் பதிவாகியும் இருக்கிறது. இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.