காவல்துறையினரை ஆபாசமாக பேசிய மது போதை ஆசாமி...!

சென்னை ஓஎம்ஆர் சாலையில் மது போதையில் காவல் துறையினரை அடித்தும், ஆபாசமாகவும் பேசிய மதுபோதை ஆசாமியின் வீடியோ வைரலாகி வருகிறது. 

சென்னை ஓஎம்ஆர் சாலையில் கண்ணகிநகர் காவல் நிலையத்தை சேர்ந்த உதவியாளர் முத்து செழியன் மற்றும் காவலர் சிலம்பரசன் ஆகிய இருவரும், இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரப்பாக்கம் ஓடை அருகே சாலையில் நின்று மது அருந்தி கொண்டிருந்த இருவரிடம் போலீசார் விசாரித்துள்ளனர். 

இதையும் படிக்க : அதிமுக - பாஜக கூட்டணி குறித்து முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்படுமா?

இதனால் ஆத்திரமடைந்த மதுபோதை ஆசாமிகள், பொது இடத்தில் மது அருந்த கூடாது என்று கூறும் நீ, சரக்கு விற்கக்கூடாது என்று கேட்க முடியுமா? என்று ஒருமையில் ஆபாசமாக பேசியுள்ளார். அத்துடன், காவல் துறையினரை தாக்கி ரகளையில் ஈடுபட்டார்.

போதையில் இவர்கள் இருவரும் செய்யும் அட்டகாசங்களை காவல் துறையினர் தங்கள் செல்போனில் பதிவு செய்த நிலையில், தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.