வீட்டை காப்பாற்ற வேலைக்கு சென்ற பெண்...காதல் கை கூடாததால் வெட்டிச் சாய்த்த இளைஞர்...!

திருநெல்வேலியில் இளம்பெண்ணை ஒருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருநெல்வேலி மாவட்டம் திருப்பணிகரசல் கிராமத்தில் வசித்து வந்தவர் மாரியப்பன் என்பவரின் மகள் சந்தியா. 18 வயதான சந்தியா, பள்ளிப் படிப்பை முடித்து விட்டு மேற்கொண்டு கல்லூரி செல்ல வழியில்லாத காரணத்தால் நெல்லையப்பர் கோயில் கீழ ரத வீதியில் பேன்ஸி ஸ்டோரில் வேலை பார்த்து வந்தார். 

இந்நிலையில் சந்தியாவை அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் குடும்ப நிலைமையை கருத்தில் கொண்ட சந்தியா, இளைஞரின் காதலை ஏற்றுக் கொள்ளாமல் தவிர்த்துள்ளார். 

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த காதலன், தொடர்ந்து தொல்லைகள் செய்யவே, இதுகுறித்து உறவினர்களிடத்தில் தெரிவித்தார் சந்தியா. பின்னர் சந்தியாவின் உறவினர்கள் கண்டித்ததால் கோபமடைந்த இளைஞர், காதலியை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டினார். 

இதையும் படிக்க : ஆசிய விளையாட்டின் 10வது நாள்: 7 பதக்கங்களை வென்றது இந்தியா!

அதன்படி 2-ம் தேதியன்று சந்தியா பேன்சி கடையில் அமர்ந்ததை ஒளிந்திருந்து வேடிக்கை பார்த்துள்ளான் காதலன். வாடிக்கையாளர்கள் கேட்ட பொருட்களை அருகில் உள்ள குடோனுக்கு சென்று எடுத்து வர இதனை பார்த்த காதலன், பைக்கில் இருந்து அரிவாளை எடுத்து விரட்டினார். 

நெல்லையப்பர் - காந்தி அம்பான் கோயில் வழியாக சந்தியா செல்வதை பார்த்தவர் அவரை பின் தொடர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டி வீசினார். ஆள் நடமாட்டம் அதிகம் இருந்ததையும் மீறி சென்ற கொடூரன், காதல் நிறைவேறாத காரணத்தால் காதலியை சரமாரியாக வெட்டி வீசி விட்டு வந்த பைக்கிலேயே திரும்பி சென்றுள்ளான். 

பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர சம்பவம் திருநெல்வேலி மாநகரையே கிடுகிடுக்க வைத்த நிலையில், டவுண் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். 

இதைத் தொடர்ந்து இளம்பெண் மரணத்துக்கு காரணமானவரை உடனடியாக கைது செய்யுமாறு, சந்தியாவின் பெற்றோர், உறவினர்கள் அனைவரும் சாலைமறியலில் ஈடுபட்டதால் திடீரென அங்கு பரபரப்பு நிலவியது.