திருத்தணி டூ ஆந்திரா.. செம்மர வேர்கள் கடத்த முயற்சி.. அதிரடி ஆக்ஷனில் இறங்கிய காவல்துறை!!

திருத்தணி அருகே, 2 கோடி ரூபாய் மதிப்புடைய செம்மர வேர்களை ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருத்தணி டூ ஆந்திரா.. செம்மர வேர்கள் கடத்த முயற்சி.. அதிரடி ஆக்ஷனில் இறங்கிய காவல்துறை!!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகேயுள்ள தாழவேடு கிராமத்தைச் சேர்ந்த ராணி என்பவர், தனக்கு சொந்தமான நிலத்தில் வருவாய்த்துறையினரின் அனுமதி பெற்று செம்மரம் வளர்த்து வந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர், வருவாய் துறையிடம் அனுமதி பெற்று, அந்த செம்மரங்களை வெட்டி விற்பனையும் செய்துள்ளார். இதையடுத்து அப்பகுதியில் இருந்த 4 டன் செம்மர வேர்களை விற்பனை செய்ய முயன்ற ராணி, அரக்கோணத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரை தொடர்பு கொண்டுள்ளார்.

இந்த நிலையில், ஆந்திராவை சேர்ந்த செம்மரக்கட்டை புரோக்கர் நாராயண ரெட்டி, வேலு மற்றும் சீனு ஆகியோர், செம்மர வேர்களை வாங்குவதற்காக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர்.

தொடர்ந்து சரக்கு வாகனத்தில் செம்மர வேர்களை ஏற்றிக்கொண்டு இருந்த போது, ஆந்திர மாநில செம்மரக் கடத்தல் தனிப்பிரிவு போலீசார், 4 பேரை கைது செய்தனர். மேலும், விவசாய இடத்தின் உரிமையாளர் ராணி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், 2 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மர வேர்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com