ஒரு பக்கம் காதல் திருமணம்... மறுபக்கம் கள்ளத்தொடர்பு... கணவரை கொலை செய்ய முயற்சித்த பெண் கைது.!! 

கோவையில் காதல்  கணவரை  கள்ளகாதலனுடன் இணைந்து கழுத்தறுத்து கொலை செய்ய முயற்சி செய்த இளம்பெண் உட்பட 6 பேரை சிங்காநல்லூர்  காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஒரு பக்கம் காதல் திருமணம்... மறுபக்கம் கள்ளத்தொடர்பு... கணவரை கொலை செய்ய முயற்சித்த பெண் கைது.!! 

கோவை ஓண்டிபுதூர் பகுதியை சேர்ந்தவர்  சேதுராஜாராம் சிங். இவர்  சவுந்தர்யா என்பவரை 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகள் இருக்கும் நிலையில், கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்த சவுந்தர்யாவிற்கு , அங்கு பணிபுரியும் ஆம்புலன்ஸ் டிரைவர்  குணசேகர் என்பவருடன் முறையற்ற தொடர்பு இருந்து வந்துள்ளது. இது தொடர்பாகவும் கணவன் மனைவி இடையே  அடிக்கடி வீட்டில் பிரச்சினை ஏற்பட்டு வந்த நிலையியல் காதல் கணவர் சேதுராஜாராம் சிங்கினை  கள்ளகாதலன்  குணசேகர் மற்றும் தனது தம்பி ஆகியோர் மூலம்  கொலை செய்ய சவுந்தர்யா திட்டம் தீட்டினார்.

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை கொல்ல முயற்சி: சிறுவர்களுடன் பெண் கைது!

கோவையில் கணவரை கள்ளகாதலனுடன் இணைந்து கொலை செய்ய முயற்சி செய்த இளம்பெண் உட்பட 6 பேரை சிங்காநல்லூர்  காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை ஓண்டிபுதூர் பகுதியை சேர்ந்தவர் சேதுராஜாராம் சிங். இவர் இ - சேவை மையத்தில் பணிபுரிந்து வருகிறார். 

சேதுராஜாராமனும் சவுந்தர்யாவும் 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகள் இருக்கும் நிலையில், கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்த சவுந்தர்யாவிற்கு , அங்கு பணிபுரியும் ஆம்புலன்ஸ் டிரைவர்  குணசேகர் என்பவருடன் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாகவும் கணவன் மனைவி இடையே  அடிக்கடி வீட்டில் பிரச்சினை ஏற்பட்டு வந்த நிலையியல் காதல் கணவர் சேதுராஜாராம் சிங்கினை  கள்ளகாதலன்  குணசேகர் மற்றும் தனது தம்பி ஆகியோர் மூலம்  கொலை செய்ய சவுந்தர்யா திட்டம் தீட்டினார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு வீட்டின் வாசலில் சேதுராஜாராம் சிங் மற்றும் சவுந்தர்யா ஆகியோர் நின்று கொண்டு இருந்தனர். அப்போது,  அங்கு வந்த குணசேகரன் மற்றும் சவுந்தர்யாவின் 17 வயது சகோதரன் மற்றும் அவரது நண்பர்கள்  சேதுராஜாராம் சிங்கினை கழுத்தறுத்து கொல்ல முயன்றனர். கழுத்தில் காயம் ஏற்பட்ட சேதுராஜாராம் கதறவே பயந்து போன இளைஞர்கள் தப்பி ஓடினர்.

சேதுராஜாராம் சிங்கின் அலறல் சத்தம் கேட்டு திரண்ட பொதுமக்கள், அவரை படுகாயமுடன் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது சவுந்தர்யா தனது கள்ளகாதலன் குணசேகர் மற்றும் தம்பி ஆகியோர் உதவியுடன்   கணவரை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.

இதனையடுத்து சவுந்தர்யா மற்றும் குணசேகரனை கைது செய்த போலீசார், சவுந்தர்யாவின் 17 வயது தம்பி மற்றும் அவரது 3 நண்பர்களையும் கைது செய்தனர் .மனைவியே தனது கணவரை   கள்ள காதலன், தம்பி உதவியுடன் கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.