நடைபயிற்சி சென்ற பெண்ணின் செயினை பறிக்க முயற்சி...நெஞ்சை பதற வைக்கும் வீடியோ...!

நடைபயிற்சி சென்ற பெண்ணின் செயினை பறிக்க முயற்சி...நெஞ்சை பதற வைக்கும் வீடியோ...!

கோவையில் நடைபயிற்சி சென்ற பெண்ணின் செயினை மர்ம நபர்கள் பறிக்க முயற்வித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பீளமேடு பகுதியை சேர்ந்த கவுசல்யா என்பவர் அப்பகுதியில் நடைபயிற்சி சென்றுள்ளார். அப்போது பின்னால் காரில் வந்த மர்ம நபர்கள் கவுசல்யா கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றுள்ளனர்.

அப்போது, சுதாரித்துக்கொண்ட கவுசல்யா செயினை பிடித்துக் கொண்டதால் காரில் இழுத்துச் செல்லப்பட்டு நூலிழையில் உயிர் தப்பினார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com