கொடுக்கல், வாங்கல் தகராறு - பெட்ரோல் குண்டு வீச்சு...

விழுப்புரம் மாவட்டத்தில் கொடுக்கல், வாங்கல் தகராறில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொடுக்கல், வாங்கல் தகராறு - பெட்ரோல் குண்டு வீச்சு...

விழுப்புரம் | விக்கிரவாண்டி ஆவுடையார்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் (42) என்பவரது வீட்டில் இன்று அதிகாலை  மணிக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்கிற உஸ்மான் (30)  என்பவர் பெட்ரோல் குண்டு வீசி உள்ளார்.

ஸ்ரீதர் என்பவர் வினோத்குமார் (எ ) உஸ்மானிடம் 7 லட்சம் பணம்   வாங்கிக்கொண்டு கொடுக்காமல் ஏமாற்றி வந்த நிலையில் ஸ்ரீதர் என்பவர் வீட்டில் வினோத்குமார் என்கிற உஸ்மான் பெட்ரோல் குண்டு வீசி உள்ளார்.

யாருக்கும் காயம் இல்லை. வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த unicon, பேஷன் பிளஸ் என்ற இருசக்கர வாகனங்கள்  எரிந்து சாம்பலாயின. இது சம்பந்தமாக விக்கிரவாண்டி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com