ஆபாச படம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?.. உங்களால் என் புகழுக்கு களங்கம்.. கணவரிடம் கண்ணீர் விட்ட ஷில்பா 

ஷில்பா ஷெட்டியிடம் விசாரணை நடத்துவதற்காக அவரது வீட்டுக்கு ராஜ்குந்த்ராவுடன் குற்றப்பிரிவு போலீஸார் சென்ற போது அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் இத்தனை ஆண்டுகள் தான் சேர்த்து வைத்த புகழை கெடுத்துவிட்டதாகவும் கூறி அழுததாக போலீஸார் தெரிவித்தனர்.
ஆபாச படம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?.. உங்களால் என் புகழுக்கு களங்கம்.. கணவரிடம் கண்ணீர் விட்ட ஷில்பா 

ஆபாச படங்களை எடுத்து அதனை இணைய செயலியில் பதிவேற்றியது தொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும்  தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா மும்பை குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கடந்த 24 ஆம் தேதி குற்றப்பிரிவு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். 

அப்போது ராஜ் குந்த்ராவுடன் ஷில்பா ஷெட்டி வாக்குவாதம் செய்ததாக போலீசார் தகவல் தெரிவிக்கின்றன. போலீஸார் சென்ற போது ஷில்பா ஷெட்டி மிகவும் வருத்தத்துடன் இருந்ததாகவும் அப்போது தம்பதியிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாவும் கூறப்படுகிறது.

மேலும் அழுது கொண்டே ராஜ்குந்த்ராவிடம் " குடும்பத்தின் பெயர் கெட்டுவிட்டது. தொழில்களில் போட்ட ஒப்பந்தங்கள் ரத்தாகிவிட்டன. நிதி இழப்புகளும் ஏற்பட்டுவிட்டன. பெரிய தொழில்கள் செய்யும் நிலையில் இது போன்ற காரியத்தை செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?

அப்போது தனது கணவர் ஆபாச படங்கள் எடுக்கவில்லை எனவும், அவருக்கும் இந்த வழக்கில் தொடர்பும் இல்லை என தெரிவித்திருந்தார். 

நீங்கள் செய்த இந்த ஒரு காரியத்தால் நான் இத்தனை ஆண்டுகளாக சம்பாதித்து வைத்த நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டது" என அழுது வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com