வியாபாரப் போட்டி:  தேநீர் கடை சூறையாடல்!

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா முன்விரோதம் காரணமாக இரு தேநீர் கடைகள் சூறையாடப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பேருந்து நிறுத்தம் அருகே குடியாத்தம் சாலையில் நாராயணன் பவன் என்பவருடைய டீக்கடையும் அதன் எதிரே பாபு என்பவரின் டீ கடையும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு ஒரு சிலர் நாராயணபவன் டீக்கடையில் டீ குடிக்க சென்றதால் தனக்கு சொந்தமான டீக்கடையில் டீ குடிக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால் ஆத்திரமடைந்த பாபு என்பவர் நாராயண பவனை அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது.  

இதனை அடுத்து நாராயண பவன் டீக்கடைக்காரர் தன்னுடைய கடையை நொறுக்கியதால் ஆத்திரத்தில் பாபு என்பவரின் டீக்கடையை அடித்து உடைத்துள்ளது சிசிடி கட்சியில் பதிவாகியுள்ளது. 

பள்ளிகொண்டாவில் இரவில் 2 டீக்கடைகளை அடித்து நொறுக்கிய சம்பவம் அப்பகுதியில்  பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. 

தற்போது இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து கடை உடைக்கப்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன