பாதிரியார் இல்லத்தை முற்றுகையிட்ட 10 பேர் கைது...

பாதிரியார் இல்லத்தை முற்றுகையிட்ட 10 பேர் கைது...

அரியலூர் | அரியலூரிலுள்ள தூய லூர்து அன்னை ஆலயத்தின் பங்கு பேரவைக் கூட்டத்தை கூட்ட வலியுறுத்தி, பாதிரியார் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அதன் உறுப்பினர்கள் 10 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.

அரியலூர்- திருச்சி சாலையில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயத்தின் பங்கு வரவு செலவு கணக்குகளை தெரிவிக்க வேண்டும் என்றும் அதற்காக உடனடியாக பேரவைக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்தி ஆலயத்தின் பாதிரியார் டோமினிக் சாவியோ இல்லத்தை பங்கு உறுப்பினர்கள் இரவு முற்றுகையிட்டனர்.

அவரது இல்ல நுழைவாயில் இருந்த கேமிராக்களையும் மறைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அரியலூர் காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட லீனஸ், வழக்குரைஞர் விஜி உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com