சாக்லேட் சாப்பிட்ட 20 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்...

சயனபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 20 மாணவர்கள் பிறந்தநாள் சாக்லேட் சாப்பிட்டதால் வாந்தி மயக்கம் வந்தது. இது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாக்லேட் சாப்பிட்ட 20 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்...
Published on
Updated on
1 min read

நெமிலி அருகே சயனபுரம்  பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது... இதில் சுமார் 150 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அதில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன் லுக்கேஸ்வரன் தனது பிறந்த நாளை முன்னிட்டு இன்று தனனுடன் பயிலும் சகமானவர்களுக்கு சாக்லேட்களை வழங்கி உள்ளான்.

அந்த சாக்லேட்களை சாப்பிட்ட மாணவர்கள் சற்று நேரம் கழித்து தனது ஆசிரியரிடம் தங்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் தலைவலி ஏற்படுகிறது என கூறியுள்ளனர். உடனடியாக வகுப்பு ஆசிரியர் அவர்கள் புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு  தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அங்கிருந்து வட்டார மருத்துவ அலுவலர் ரதி தலைமையில் மருத்துவக் குழுவினர் விரைந்து வந்தனர். மயக்கம் அடைந்த மாணவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. உடனடியாக மேலும் ஒன்றிய குழு தலைவர் துணைத் தலைவர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் விரைந்து வந்து விசாரித்தனர்.

மேலும் இதில் காலாவதியான சாக்லேட்டை உண்டதால் மாணவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், இது தொடர்பாக மாணவர்களுக்கு தொடர்ந்து அப்பகுதியில் மருத்துவக் குழுவினர் முகாமிட்டு முதலுதவி உதவி அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக நெமிலி காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இதனால் மாணவர்களின் பெற்றோர்களிடையே அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com