60-வது அகில இந்திய செயல்முறை மருத்துவ சங்க மாநாடு...

செயல்முறை மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த இந்திய அளவிலான கருத்தருங்கு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

60-வது அகில இந்திய செயல்முறை மருத்துவ சங்க மாநாடு...

செயல்முறை மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த அகில இந்திய அளவிலான கருத்தருங்கு சென்னை வேலப்பஞ்சாவடியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் நடைபெற்றுள்ள.

அகில இந்திய செயல்முறை மருத்துவ சங்கம் மற்றும் சவீதா செயல்முறை மருத்துவக் கல்லூரி இணைந்து, 60 - ஆவது அகில இந்திய செயல்முறை மருத்துவர்கள் மாநாட்டை தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் ஜசின்தா லாசரஸ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

மேலும் படிக்க | 5 கூடுதல் நீதிபதிகளுக்கு...பதவி பிரமாணம் செய்து வைக்கும் தலைமை நீதிபதி!

இதில் சவீதா பல்கலைக்கழகத்தின் நிறுவனர் வேந்தர் N.M. வீரையன் அவர்கள், அகில இந்திய செயல்முறை மருத்துவ சங்கத் துணைத்தலைவர் மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து பேசிய மாநில மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் ஜசின்தா, மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வில் செயல்முறை மருத்துவத்தின் முக்கியத்துவத்தை தெளிவாக எடுத்துரைத்தார்.

மேலும் படிக்க | 21ம் நூற்றாண்டில் முக்கிய பங்கு வகிக்கும் ஆற்றல் துறை.....

தமிழ்நாடு அரசு 1000 கோடி மதிப்பிலான செயல்திட்டத்தை ஏற்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். இதில், செயல்முறை மருத்துவத்தின் பங்களிப்பை பெருமளவில் சேர்க்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வில் 1200 - க்கும் மேற்பட்ட மாணவர்கள், செயல்முறை மருத்துவர்கள் மற்றும் அகில இந்திய செயல்முறை மருத்துவ சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். 3 நாட்களில் நடைபெற்ற மாநாட்டில் ஆராய்ச்சிக் கட்டுரைகள், பயிற்சிக் கருத்தரங்குகள் நடைபெற்றது.

மேலும் படிக்க | புதிய கட்டடங்களுக்கு காணொலிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்...!