மத வெறியும், ஊழலும் நிறைந்த ஒன்றிய அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்...! ஆ.ராசா பேச்சு...!!

மத வெறியும், ஊழலும் நிறைந்த ஒன்றிய அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்...! ஆ.ராசா பேச்சு...!!

மத வெறியும், ஊழலும் நிறைந்த ஒன்றிய அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக வேண்டும்  என கூடலூரில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா பேசியுள்ளார்.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா மக்களை நேரில் சந்தித்து மக்களின் குறைகளை கேட்டு அறிந்து வருகிறார். அதன்படி கூடலூர் நகர திமுக சார்பில் நகர செயலாளர் இளஞ்செழியன் பாபு தலைமையில் கூடலூர் பகுதியில் முதலமைச்சர் மு க ஸ்டாலினின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

அப்போது அள்ளூர் வயல் பழங்குடியின கிராமத்திற்கு சென்ற ஆ.ராசா மக்களின் கோரிக்கைகள் குறித்த மனுக்களை பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசிய அவர், இந்தியாவில் நடைபெற்று வருகிற மதவாத ஆட்சி 10 லட்சம் கோடி மக்கள் பணத்தை ஏமாற்றிய அதானி ஆட்சியாக ஒன்றிய அரசு செயல்படுகிறது. மதவாதமும் ,ஊழலும் கலந்துள்ள ஒன்றிய அரசை வீட்டுக்கு அனுப்பி இந்தியாவையும், அரசியல் சட்டத்தையும் காப்பாற்ற வேண்டும் எனக் கூறினார். மேலும் மதவெறியில் இருந்து மக்களையும், நாட்டையும் மீட்டு மீண்டும் மதசார்பற்ற ஆட்சியை அமைக்க இந்தியா முழுவதும் நம்பிக்கையாக உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் செயல்படுவதாக ஆ.ராசா பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பா.மு முபாரக், துணைச் செயலாளர் ரவிக்குமார், முன்னாள் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிட மணி, ஒன்றிய செயலாளர் லியாக்கத் அலி உட்பட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.