போலீசாரை தாக்கிய 5 பேர் கொண்ட கும்பல்...! அதிரடி கைது...!

போலீசாரை தாக்கிய 5 பேர் கொண்ட கும்பல்...! அதிரடி கைது...!

சென்னை ராயபுரம் காவலர் குடியிருப்பில் குடியிருந்து வருபவர் ராஜேஷ்(39) இவரது மனைவி ஸ்ரீ லட்சுமி ராஜேஷ். ராஜேஷ், அரசு ஸ்டான்லி மருத்துவமனை பகுதியில் H2 காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தெரு நாய்களுக்கு உணவு அளித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு 11:30 மணி அளவில் கிழக்கு கல் மண்டபம் சாலை பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையம் அருகே நாய்க்கு உணவு அளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஐந்து பேர் கொண்டம் கும்பல் ஒன்று, நாயை தாக்கினர். இதனை தட்டி கேட்ட ராஜேஷுக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ராஜேஷை அந்த கும்பல் தலை மற்றும் கை, கால்களில் உருட்டு கட்டையால் அடித்துள்ளனர். மேலும் அதில் காயமடைந்த ராஜேஷ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக ராயபுரம் ஆய்வாளர் மாரியப்பன் வழக்கு பதிவு செய்து சந்தோஷ்குமார், அபிலாஷ், காமேஷ், நரேஷ், திவாகர் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்து  சிறையில் அடைத்தனர்.