கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து...மூன்று பேர் உயிரிழப்பு!!!

கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து...மூன்று பேர் உயிரிழப்பு!!!

இராமநாதபுர மாவட்டம் பரமக்குடியில் கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும்  சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இராமநாதபுர மாவட்டம் :

ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம்(80) .இவர் தனது குடும்பத்தினருடன் கிருஷ்ணகிரி சென்றுவிட்டு காரில் ஊருக்கு திரும்பி வந்துள்ளார். பரமக்குடி அருகே அரியனேந்தல் என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்தது.  ராமநாதபுரத்தில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பேருந்து கார் மீது மோதி உள்ளது. இதில் காரில் பயணித்த மணிமேகலை, நிர்மலா, கார் ஓட்டுனர் செல்வகுமார் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ராமநாதபுரத்தில் இருந்து மதுரை சென்ற அரசு பேருந்து நான்கு வழி சாலையில் பரமக்குடி ஊருக்குள் செல்வதற்காக எதிர் திசையில் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தெரிந்து கொள்ள ///  திடீரென தீப்பற்றி எரிந்த காரால் பரபரப்பு...

விபத்து குறித்து பரமக்குடி டவுன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கார் மீது அரசு பேருந்து மோதி விபத்தில் இரு பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் தெரிந்து கொள்ள ///  அம்பத்தூரில் இளம் பெண்ணை தாலி கயிற்றால் கழுத்தை நெரித்து கொடூர கொலை