பேருந்து மீது லாரி மோதி 7 பேர் உயிரிழப்பு; சுற்றுலா சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!

பேருந்து மீது லாரி மோதி 7 பேர் உயிரிழப்பு; சுற்றுலா சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!

திருப்பத்தூா் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே பழுதாகி நின்ற சுற்றுலா பேருந்து மீது லாாி மோதிய விபத்தில் 7 பெண்கள் உயிாிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் மாவட்டம் ஓணான்குட்டை பகுதியை சேர்ந்த 45-க்கும் மேற்பட்டோர் கடந்த 8-ம் தேதி இரண்டு பேருந்துகளில் மைசூாில் உள்ள தர்மஸ்தாலா கோயிலுக்கு இன்ப சுற்றுலா சென்றனர். பின்னா் அவா்கள் சுற்றுலாவை முடித்துக்கொண்டு அதே பேருந்தில் வீட்டிற்கு  திரும்பி வந்துக் கொண்டிருந்தனா்.

இந்த நிலையில் இந்த பேருந்து அதிகாலை 3 மணியளவில் சண்டியூா் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென டயா் பஞ்சா் ஆகியுள்ளது. இதனையடுத்து பேருந்தில் இருந்த பெண்கள் சிலா் கீழே இறங்கி தேசிய நெடுஞ்சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவாில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனா்.

அப்போது அதிவேகமாக வந்த ஈச்சர் லாாி ஒன்று எதிா்பாராதவிதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பெண்கள் மீது பேருந்து சாய்ந்ததில் 7 பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பாிதாபமாக உயிாிழந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் புஷ்பராஜ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட போலீசாா் பெண்களின் உடலை கைப்பற்றி பிரேத பாிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த சிலா் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அதிகாலையிலேயே நடைபெற்ற இந்த கோர விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க:மகளிர் உரிமைத் தொகை; இன்று இறுதிகட்ட ஆலோசனை!