பயிர் கடனளவு நிர்ணயம் குறித்த குழு கூட்டம்..! கோரிக்கை விடுத்த விவசாயிகள்...!

பயிர் கடனளவு நிர்ணயம் குறித்த குழு கூட்டம்..! கோரிக்கை விடுத்த விவசாயிகள்...!

பயிர் கடனளவு நிர்ணயம் குறித்த மாவட்ட அளவிலான தொழில்நுட்ப குழு கூட்டம்- பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர்.
  
திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பயிர் கடனளவு நிர்ணயம் குறித்த மாவட்ட அளவிலான தொழில்நுட்பக்குழு கூட்டம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைப்பெற்றது. மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி தலைமையில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர். 

இதில் சேலம் மண்டலத்தில் வழங்கபடுவது போன்றே அரியலூர் மாவட்டத்தை உள்ளடக்கிய திருச்சி மண்டலத்திற்கும் பயிர் கடன் செலுத்துவதற்கான காலகெடுவை 12 மாதங்களாக மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கபட்டது. குறிப்பாக விவசாயிகளுக்கு வழங்கும் நெல், கடலை, பருத்தி, மக்காசோளம், கம்பு, பயிறு வகைகளுக்கு பயிர் கடனை கட்டும் 8 மாத காலக்கெடுவை சேலம் மண்டலத்தில் உள்ளது போலவே 12 மாதங்களாக மாற்றி தரவேண்டும் என கோரிக்கை வைக்கபட்டது. இதனால் திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கபட்டது.

 இதையும் படிக்க : சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்குமாறு கோரிக்கை..