கடும் பனிப்பொழிவால் கருகும் கறிவேப்பிலை...

கடும் பனிப்பொழிவால் கருகும் கறிவேப்பிலை விளைச்சல் பாதிப்பால் மேட்டுப்பாளையம் பகுதி விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

கடும் பனிப்பொழிவால் கருகும் கறிவேப்பிலை...

கோவை | கடந்த சில வரகாலமாகவே தொடரும் கடும் பனிப்பொழிவு காரணமாக கறிவேப்பிலை கருகி வீணாவதால் விவசாயிகள் கவலையில் ஆழ்த்துள்ளனர். கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் மற்றும் இதன் சுற்று வட்டார பகுதிகளில் வாழைக்கு அடுத்தபடியாக கறிவேப்பிலை அதிகளவில் பயிரடப்பட்டு வருகிறது.

இங்கு விளையும் கறிவேப்பிலை தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவிற்கும் கொண்டு செல்லப்பட்டு வருகிறுது.

மேலும் படிக்க | தலையில் கரும்பு கட்டு விழுந்த விபத்தில் தொழிலாளி பலி ...

இந்நிலையில் இவ்வாண்டு வழக்கமாக பெய்ய வேண்டிய பருவ மழையின் அளவு போதுமானதாக இருந்தாலும் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக கொட்டி தீர்க்கும் கடும் பணியால் கறிவேப்பிலை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் மாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை கடும் பணிப்பொழிவு நீடிப்பதால் வளர்ச்சி பாதித்திருந்த கறிவேப்பிலைகள் தற்போது பூச்சி தாக்குதகளாலும் பாதிப்படைந்து வருகின்றன. கடும் பணியால் கருகி வரும் கறிவேப்பிலைகளில் நோய் தாக்குதல்களும் அதிகரித்து இதன் இலைகள் சுருங்கி புள்ளிகளோடு காணப்படுகின்றன.

மேலும் படிக்க | களை கட்டிய வார சந்தை... ரூ.8 கோடிக்கு மேல் வர்த்தகம் ...

இதனால் இப்பகுதிகளில் கறிவேப்பிலை உற்பத்தி முன்னெப்போதும் இல்லாத வகையில் குறைந்து இதன் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.கடந்த மாதம் கிலோ ஒன்றுக்கு நாற்பது ரூபாய் வரை விலை போன கறிவேப்பிலை தற்போது விளைச்சல் பாதித்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன் காரணமாக கிலோ அறுபது வரை விலை போகிறது.

இந்த விலை உயர்வால் எவ்வித பலனும் இல்லை என வருத்தம் தெரிவிக்கும் கறிவேப்பிலை விவசாயிகள் பனி பாதிப்பால் முன்னர் கிடைத்த விளைச்சலில் இருபது சதவிகிதம் கூட கிடைப்பதில்லை என்றும் மகசூல் பாதித்து விளைச்சல் குறைந்து விட்டதால் கூடுதல் விலை கிடைத்தும் பலனில்லை என்கின்றனர்.

நூறு கிலோ கிடைக்க வேண்டிய இடத்தில் பதினைந்து கிலோ வரை கிடைப்பதால் தாங்கள் பெரும் இழப்பில் சிக்கி தவிப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க | செடிகளை தாக்கும் கருகல் நோய்.... வேதனையில் விவசாயிகள்...