மின்னணு சாதனமில்லா ஒரு மணிநேரத்தை குழந்தைகளுக்கு ஒதுக்குங்கள் - நலினா ராமலட்சுமி, பேரெண்ட் சர்க்கிள் நிறுவனர்

மின்னணு சாதனமில்லா ஒரு மணிநேரத்தை குழந்தைகளுக்கு ஒதுக்குங்கள் - நலினா ராமலட்சுமி, பேரெண்ட் சர்க்கிள் நிறுவனர்

சென்னை மயிலாப்பூரில் பேரெண்ட் சர்க்கிள்  (parent circle) மற்றும் ராம்கோ சிமெண்ட்ஸ் இணைந்து மின்னணு சாதனமில்லா ஒரு மணிநேரம் என்ற  தலைப்பில் பத்திரிகையாளர் கருத்தரங்கம் நடத்தினர். இதில் பேரெண்ட் சர்க்கிள் அமைப்பின் நிறுவனர் நலினா ராமலக்ஷ்மி மற்றும் ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தின் செயலாளர் செல்வநாயகம் மற்றும் ஜோதி பிரபாகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர். 

மேலும் பேரெண்ட் சர்க்கிள் அமைப்பு சார்பில் பள்ளிகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகளும் , பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. குழந்தைகளிடம் அதிகப்படியான நேரம் ஒதுக்கி அவர்களுடன் பந்தத்தை உருவாக்க வேண்டும். முக்கியமாக தொலைக்காட்சி தொலைபேசி போன்ற மின்னணு சாதனங்கள் இல்லாமல் குழந்தைகளுடன் நேரத்தை ஒதுக்கினால் மகிழ்ச்சி கூடும்.

2019ல் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டு இந்த ஆண்டு குழந்தைகள் தின நாளில் அனைவரது வீட்டிலும் ஒரு மணி நேரம் எந்த ஒரு மின் சாதனமும் இல்லாமல் குழந்தைகளிடம் பேசினால் எப்படி உள்ளது என்பதை உணர்வீர்கள் என்று அறிவுறுத்தினோம். தொலைபேசியை ஓரம் கட்டி விட்டு குழந்தைகளுடன் நேரத்தை செலவழித்தால் தன்னம்பிக்கையும் மேலும் ஒரு பந்தமும் உண்டாகும்.

இந்த வருடம் ஜனவரி மாதத்தில் குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் 2000க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு பெற்றோருடன் நேரத்தை கழிப்பது குறித்து சிறப்பான உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். எங்கள் அமைப்பு வெற்றியை நோக்கி நகர்வது மகிழ்ச்சியளிக்கிறது. இதைவிட அடுத்த ஆண்டும் சிறப்பாக குழந்தைகளுக்கு எங்கள் அமைப்பின் மூலமாக போட்டிகள் நடத்தப்படும் என பேரெண்ட் சர்க்கிள் அமைப்பு நிறுவனர் நலினா ராமலட்சுமி தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com