மீனாட்சியம்மன் கோயிலில் முறையாக இல்லாத பாதாள சாக்கடை!!!கழிவுநீர் தேங்குவதால் பக்தர்கள் அவதி ...

மீனாட்சியம்மன் கோயிலில் முறையாக இல்லாத பாதாள சாக்கடை!!!கழிவுநீர் தேங்குவதால் பக்தர்கள் அவதி ...

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் பிரதான வாயிலான கிழக்கு கோபுர வாயில் பகுதியில் இரவில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் அவதி படுகின்றனர்.இதனை மாநகராட்சி தூய்மைப் ஊழியர்கள் காலை முதல் அவசர அவசரமாக அகற்றி வருகின்றனர்.

மதுரையின் சிறப்பு அம்சமாக அமைந்த மீனாட்சி அம்மன் கோயில் இந்தியாவின் பழமையான மற்றும் மிக முக்கியமான கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் புராண மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்கது.மேலும் இக்கோவில் நான்கு கோபுர வாசல்களை கொண்ட கோவிலாகும்.மீனாட்சியம்மன் கோயிலின் வரலாறு 1 ஆம் நூற்றாண்டு  பாண்டிய வம்சத்தை ஆண்ட குலசேகரர் பாண்டியன் என்ற மன்னன், சிவபெருமான் தன் கனவில் கூறியபடி இக்கோயிலைக் கட்டியதாகக் கூறப்படுகிறது.

அவ்வளவு சிறப்பு மிக்க இக்கோவிலில் தற்போது பாதாள சாக்கடை திறந்து கழிவுநீர் வெளியே கசிந்து வருகிறது.தேங்கிய கழிவு நீரை அகற்றும் மாநகராட்சியின் பணியாளர்கள் கையுறை காலில் ஷூ உள்ளிட்ட எந்த அடிப்படை பாதுகாப்பும் உபகரணங்களும் அணியாமல் துர்நாற்றம் மிகுந்த சாக்கடையில் இறங்கி கழிவுநீர் அடைப்பை சீர் செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது.

மாநகராட்சி நிர்வாகம் கையுறை உள்ளிட்ட எந்த பாதுகாப்பு உபகரணங்களையும் நீண்ட நாட்களாக வழங்கவில்லை என்றும் பணியாளர்கள் குற்றச்சாட்டு முன் வைத்துள்ளனர்.மழைநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை முறையாக இல்லாததால் மழைக்காலங்களில் தொடர்ச்சியாக மழை நீர் கழிவுநீர் தேங்குவதால் அப்பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளார்.