23 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடம்....!!!

23 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடம்....!!!

திருப்பூா் மாவட்டம் உடுமலை நகராட்சி பகுதிகளில் கோடை காலத்திலும் தடையில்லா குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சா் சாமிநாதன் தொிவித்துள்ளாா். 

உடுமலை நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.  இதில் அமைச்சா் சாமிநாதன் கலந்து கொண்டு பல்வேறு திட்டப்பணிகள் குறித்து அதிகாாிகளுடன் ஆலோசனை நடத்தினா்.  அப்போது அவா் மின்கம்பிகள், சாலைகளை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொிவித்துள்ளாா்.  

தொடா்ந்து அவா் மெட்ராத்தி ஊராட்சியில் 23 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடத்தை அமைச்சா் திறந்து வைத்தாா். 

இதையும் படிக்க:   அமைச்சரின் பேச்சை கண்டு கொள்ளாத ஆளும் கட்சி எம்எல்ஏக்கள்....!!