வடமாடு மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்...!!

வடமாடு மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்...!!

திருப்பத்தூர் அருகே நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை விடாமுயற்சியுடன் அடக்கிய வீரர்கள் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் இளங்குடி அருகே கருங்குடி கிராமத்தில் முதலாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.  கருகுடி கிராமத்தில் கடை பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 13 காளைகளும், ஒவ்வொரு காளைகளை அடக்குவதற்கு 9 மாடுபிடி வீரர்களும் அனுமதிக்கப்பட்டனர். 

ஒவ்வொரு காளைகளையும் அடக்குவதற்கு 20 நிமிடங்கள் வழங்கப்பட்டன.  25 நிமிடங்களுக்குள் காளைகளை அடக்கினால் வீரர்கள் வெற்றி பெற்றதாகவும், இல்லையெனில் மாடுகள் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. வெற்றி பெற்ற வீரர் மற்றும் காளையின் உரிமையாளர்களுக்கு ரூ.5,000 மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.  

காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மருத்துவ பரிசோதனை செய்த பிறகே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.  இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் மாடுகள் முட்டியதில் 5 பேர் காயமடைந்தனர்.

இதையும் படிக்க:   செங்கல்பட்டில் தொடங்கப்பட்ட நம்ம ஊரு சூப்பரு என்ற திட்டம்...!!