கள்ளக்காதல் ஜோடிகளின் சடலம் அழுகிய நிலையில் மீட்பு... தற்கொலையா ??கொலையா??

கள்ளக்காதல் ஜோடிகளின் சடலம் அழுகிய நிலையில் மீட்பு... தற்கொலையா ??கொலையா??

சேலம் மாவட்டம் கல்வராயன் மலை தொரடிப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட வண்டகபாடி கிராமத்தை சேர்ந்த இளைஞர் பூபாலன் வயது 26.இவர் நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை உள்ளது இவர் சுமார் மூன்று மாதங்களாக தூத்துக்குடியில் பணிபுரிந்து வந்துள்ளார் அப்போது இவருக்கும் தூத்துக்குடி அருகிலுள்ள ஆழ்குடி கிராமத்தை சேர்ந்த திருமணமாகி மூன்று குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.இது பெண்ணின் கணவருக்கு தெரிய வந்த நிலையில் இருவரும் கடந்த மாதம் 20ஆம் தேதி அங்கிருந்து வெளியேறி உள்ளனர். 

சுமார் 20 தினங்களாக இவர்களை காணாத நிலையில் உறவினர்கள் தேடி வந்துள்ளனர் .பின்னர் கருமந்துறை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் இரண்டு பேரின் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக கருமந்துறை காவல்துறைக்கு கிடைத்த தகவலின் பெயரில் கருமந்துறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் விரைந்து சடலத்தை மீட்டு பிரதே பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .இது கொலையா இல்லை தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தெரிந்து கொள்ள ///  கட்டையால் அடித்து கொலை முயற்ச்சி...6 பேர் கைது...