ஆண்டின் முதல் சூரிய உதயத்தை காண குவிந்த சுற்றுலாப்பயணிகள்...

கன்னியாகுமரியில் இந்த ஆண்டின் முதல் சூரிய உதயத்தை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் திரண்டதால் கலைக்கட்டி உள்ளது.

ஆண்டின் முதல் சூரிய உதயத்தை காண குவிந்த சுற்றுலாப்பயணிகள்...

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினசரி ஆயிரக்கணக்கான உள்ளூர் பயணிகளும், வெளியூர், வெளிநாடு சுற்றுலா பயணிகளும் வருவதுண்டு. அப்படி வருபவர்கள், கன்னியாகுமரியில் சூரிய உதயம், சூரிய அஸ்தமம், கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவன் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்ப்பது உண்டு.

அந்த வகையில் தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவர்,இந்நிலையில் இன்று 2023 புத்தாண்டின் முதல் சூரிய உதயத்தை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் கன்னியாகுமரி கலைக்கட்டி உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் வருட பிறப்பிற்கு வெளிநாடுகளிலிருந்தும், வெளியூர்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவர் வந்து முதல் சூரிய உதயத்தை காண்பது வழக்கம். அந்த வகையில் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகாலைகளையிலேயே காத்திருந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்.

மேலும் கன்னியாகுமரியில் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகையால் தங்கும் விடுதிகள் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் தவிர்த்து வருகின்றனர். அதிகமான சுற்றுலா பயணிகளின் வருகையாலும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க | ஓடும் வேனில் பட்டாசு வெடித்து புத்தாண்டு கொண்டாட்டம்! - வைரலாகும் சிறுவர்கள் வீடியோ...