அதிகாலை சூரிய உதயத்தை காண குவிந்த சுற்றுலாப்பயணிகள்...

விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரி கடற்கரையில் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்.

அதிகாலை சூரிய உதயத்தை காண குவிந்த சுற்றுலாப்பயணிகள்...

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினசரி உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர்,வெளி மாநிலம்,வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவர்.

அவர்கள் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகுமூலம் சென்று பார்ப்பர். அதேபோன்று சூரிய உதயம், சூரிய அஸ்தமம் ஆகும் இயற்கை அழகை நேரடியாக பார்ப்பர்.

மேலும் படிக்க | வார இறுதி நாளான இன்று உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!

மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களில் குடும்பத்துடன் சென்று பார்த்து ரசிப்பார். அந்த வகையில் ஞாயிறு வார விடுமுறை தினமான இன்று முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கத்தில் சூரிய உதயத்தை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அதிகாலையியே குவிந்தனர்.

மேலும் சூரிய உதயத்தை காண்பதற்கான திடலில் அமர்ந்து காத்திருந்து சூரிய உதயத்தை கண்டு ஆரவாரம் செய்த சுற்றுலா பயணிகள் தங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தாருடன் கடலில் விளையாடியும் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர்.

பின்னர் கன்னியாகுமரிக்கு வந்ததன் நினைவாக அங்குள்ள கடைகளில் தங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கிவிட்டு கன்னியாகுமரியை சுற்றியுள்ள சுற்றுலாப் பகுதிகளை கண்டு ரசித்தனர். இதனால் அங்குள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க | நீலகிரியில் ஏற்பட்ட தீ விபத்து.... மீட்பு பணிகள் தீவிரம்!!