பாரம்பரிய உடையில் வில் அம்பு சாஸ்திரத்தில் தோடர் பழங்குடியினரின் திருமண நிகழ்ச்சி...

உதகையில் நடைபெற்ற தோடர் பழங்குடியினரின் திருமண நிகழ்ச்சியில், மக்கள் பாரம்பரிய உடை அணிந்து கலாச்சார நடனம் ஆடி காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.

பாரம்பரிய உடையில் வில் அம்பு சாஸ்திரத்தில் தோடர் பழங்குடியினரின் திருமண நிகழ்ச்சி...

நீலகிரி | மலைப் பிரதேசமான நீலகிரி மாவட்டம் உதகையில் தோடர், இருளர், குரும்பர் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். காலம் மாறினாலும் இவர்கள் திருமண விழாக்களும், கோவில் நிகழ்ச்சிகளும் இன்றும் பழமை மாறாமல் நடத்தப்படுகின்றன.

அந்த வகையில் தோடர் பழங்குடியினரின் வில் அம்பு சாஸ்திர திருமண நிகழ்ச்சி உதகை அரசு தாவரவியல் பூங்கா பகுதியில் நடைபெற்றது. இரண்டு தம்பதிகளின் திருமணம் ஒன்றாக நடத்தப்பட்டது. 

மேலும் படிக்க | சுற்றுலா தளங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!

மணமகன்கள் பூர்ஸ் என்ற தாவரத் தண்டுகளில் வில், அம்பை உருவாக்கி அதை நாவல் மரத்தின் அடியில் காத்திருக்கும் மணமகள்களுக்கு கொடுத்தனர். மணமகள்கள் அதனை ஏற்றுக் கொண்டு நெய் தீபம் ஏற்றி வில் அம்பை வணங்கினர். பின்னர் அனைவரும் பாரம்பரிய உடையில் கலாச்சார நடனம் ஆடி மகிழ்ந்தனர்.  

மேலும் படிக்க | பாறை மீது நின்று தண்ணீர் குடித்த யானையை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்...