வனப்பகுதியில் இறந்து கிடந்த பெண் யானை... என்ன ஆனது?

வனப்பகுதியில் இறந்து கிடந்த பெண் யானை... என்ன ஆனது?

கோவை | மேட்டுப்பாளையம் அருகே உள்ள தோலம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடர் வனப்பகுதியை ஒட்டி உள்ளது.இந்த வனப்பகுதியில் காட்டு யானை,மான்,காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று மாலை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகர் செல்வராஜ் தலைமையிலான வனத்துறையினர் தோலம்பாளையத்தை அடுத்துள்ள நீலாம்பதிவனப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,அப்பகுதியில் வயது வந்த பெண் யானை இறந்து கிடப்பது தெரியவந்தது.

மேலும் படிக்க | காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு...

இதனையடுத்து இச்சம்பவம் குறித்து மாவட்ட வன அலுவலர் அசோக் குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் இறந்து கிடந்த பெண் யானை எப்படி இறந்தது ? என்பது குறித்து அறிய உடற்கூறாய்வானது மாவட்ட வன அலுவலர்,உதவி வனப்பாதுகாவலர்,வன உயிரின ஆர்வலர்கள்,கிராம வனக்குழு தலைவர்,வனத்துறையினர் முன்னிலையில் இன்று நடைபெற உள்ளது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில் இறந்த யானையின் வயது,இறந்த விதம்,நோய் தாக்குதல் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து உடற்கூறாய்விற்கு பின்னரே தெரிய வரும்.உடற்கூறாய்வு முடிந்தவுடன் உடல் பாகங்கள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் அப்பகுதியிலேயே புதைக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க | காட்டு யானைகள் முகாம் - மக்களுக்கு எச்சரிக்கை...