திமுக ஒன்றிய பெருந்தலைவரை கவுரவித்த அதிமுக ஒன்றிய கவுன்சிலர்...

புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பூமி பூஜை பணியை துவக்கி வைக்க வருகை தந்த திமுக ஒன்றிய பெருந்தலைவர்க்கு மாலை அணிந்து பரிவட்டம் கட்டி அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கவுரவித்தார்.
திமுக ஒன்றிய பெருந்தலைவரை கவுரவித்த அதிமுக ஒன்றிய கவுன்சிலர்...

சென்னை | கேளம்பாக்கம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கப்பட்ட ரூபாய் சுமார் 20 லட்சம் மதிப்பீட்டில் சாத்தங்குப்பம் பகுதியில் கிருஷ்ணா நகர், சொக்கம்மாள் குறுக்கு தெரு மற்றும் 9வது வார்டு எல்லையம்மன் கோயில் தெரு ஆகிய இடங்களில் புதிய சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. 

அதிமுக ஒன்றிய குழு உறுப்பினர் திவ்யா வினோத்கண்ணா ஏற்பாட்டில் சிறப்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருப்போரூர் திமுக ஒன்றிய பெருந்தலைவர் இதயாவர்மனுக்கு அம்மன் கோயிலில் அதிமுக ஒன்றிய குழு உறுப்பினர் பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து கவுரவித்து வரவேற்றார். 

பின்னர் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பூமி பூஜை போடும் பணியை சாமி கும்பிட்டு செங்கல் வைத்து பூமி பூஜையை துவக்கி வைத்தார். பின்னர் ஜேசிபி இயந்தியம் மூலம் புதிய சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டது.

அதிமுக ஒன்றிய குழு உறுப்பினர் திவ்யா வினோத்கண்ணா இளைஞார் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் இணை செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. உடன் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் இருந்தனர். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com