மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்...

மத்திய அரசை கண்டித்து நெய்வேலியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்...

கடலூர் | நெய்வேலி வட்டம் 18ல் உள்ள பாரத ஸ்டேட் வங்கி எதிரே காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு அண்மையில் மேற்கொண்ட கடன் தள்ளுபடியில் விவசாயிகளுக்கு பதிலாக அதானி அம்பானி ஆகிய பெரும் முதலாளிகளுக்கு எல்ஐசி மற்றும் ஸ்டேட் வங்கிகளில் மூலம் வழங்கிய கடனை தள்ளுபடி செய்ததை கண்டித்தும் பெட்ரோல் டீசல் மற்றும் சமய எரிவாயு விலை உயர்வையும் கட்டுப்படுத்திய தவறிய மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் மற்றும் விருதாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் M.R ராதாகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கலந்து கொண்டார். மாநில பொதுக்குழு உறுப்பினர் P.ஸ்ரீபன் அவர்கள் தலைமை வகித்தார் மாவட்ட பொருளாளர்கள் K ராம்குமார் மற்றும் T.R ராஜன் அவர்கள் முன்னிலை வகித்தனர்

வரவேற்புரையை நகர பொதுச்செயலாளர் K.இளங்கோவன் அவர்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் இந்திய தேசிய காங்கிரஸ் தொழிற்சங்க மாநிலத் தலைவர் K.குமார் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொகுதி நகர நிர்வாகிகள் உறுப்பினர்கள் மகளிர் அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com