சொத்து தகராறில் மகனை ஓட ஓட வெட்டிய தந்தை...

சொத்து தகராறில் பெற்ற மகனை, தந்தையே ஓட ஓட வெட்டிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்து தகராறில் மகனை ஓட ஓட வெட்டிய தந்தை...

தருமபுரி | பாலக்கோடு அருகேவுள்ள மூங்கில்பட்டி கிராமத்தை சேர்ந்த 40 வயதான பிரகாஷ் யாஷ்மின் என்ற பெண்ணை காதலித்து பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு தேவப்பிரியன் பிரகல்யா என இரண்டு குழந்தைகைள்உள்ளனர். மதம் மாறி திருமணம் செய்ததால் இவர்களுக்கு தொடர்ந்து சொத்து பிரச்சனை நீடித்து வந்துள்ளது

இந்நிலையில் நேற்று தனது வீட்டருகே இருந்த பிரகாஷை அவரது தாய் தந்தை இருவருமே சேர்ந்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத பிரகாஷ் உயிரை காப்பாற்றி கொள்ள அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றிருக்கிறார்.

விடாமல் விரட்டி துரத்திய பிரகாஷின் தந்தை மீண்டும் அரிவாளால் வெட்ட முயன்று தடுமாறி கிழே விழுந்துள்ளார். இப்போது பிரகாஷ் பலத்த காயத்துடன் உயிர் தப்பியுள்ளார். வீச்சு அரிவாளுடன் துரத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. வெட்டுக்காயம் பட்ட பிரகாஷ் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தனது தாய் தந்தை மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுத்துள்ளார். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் ஆம்புலன்சை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

புகார் தொடர்பாக காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கும், மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுங்கள் எனக்கூறி பிரகாஷை மீண்டும் மருத்துவமனைக்கே அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com