பற்றி எரியும் காட்டு தீயால் திணறும் வனத்துறையினர்...

வாணியம்பாடி அருகே பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க வனத்துறையினர் போராடி வருகின்றனர்.

பற்றி எரியும் காட்டு தீயால் திணறும் வனத்துறையினர்...

திருப்பத்தூர் | வாணியம்பாடி அடுத்த மாதகடப்பா காப்பு காட்டில் மர்ம நபர்கள் வைத்த தீயால் தரைகாட்டில் தொடங்கிய தீ வெள்ளமலை, கக்கல கோணை காடு மற்றும் மதனான்சேரி காடு வரை தீ கொழுந்து விட்டு எறிந்து வருகிறது.

தகவல் அறிந்து வந்த வாணியம்பாடி வன அலுவலர் இளங்கோ தலைமையிலான வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் தீ பரவலாக கொழுந்து விட்டு எரிவதால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

மேலும் படிக்க | நீலகிரியில் ஏற்பட்ட தீ விபத்து.... மீட்பு பணிகள் தீவிரம்!!

வனப்பகுதியில் மர்ம நபர்கள் வைத்த தீயால் கருங்காலி, துறிஞ்சி,உள்ளிட்ட  மூலிகை மரங்கள் தீயில் எறிந்து வருகிறது. மேலும் அங்கு மயில், முயல் உள்ளிட்ட வன பறவைகள், வனவிலங்குகள் அதிகமாக வாழ்ந்து வருவதால்  அவையும்  தீயில் கருகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

வனத்துறையினர் அங்கேயே முகாமிட்டு தீயை கட்டுப்படுத்தும்  பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | திடீரென பரவிய காட்டுத் தீயால் கருகிய மரங்கள்...