தொடர்மழையால் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தம்...

கொடைக்கானலில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தொடர்மழையால் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தம்...

திண்டுக்கல் : கொடைக்கானலில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகிறது. இன்று காலை லேசான வெயில் நிலவியது. தற்பொழுது மீண்டும் கன மழையானது துவங்கி உள்ளது.

இதனால் கொடைக்கானல் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக இயக்கப்பட்டு வரும் படகு குழாமில் படகு சவாரி ஆனது கனமழை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டு மணி நேரத்துக்கு மேலாக சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி, மற்றும் சிறு வியாபாரிகள் இந்த கனமழையால் மிகப்பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com