ராஜகோபால சுவாமி கோயிலில் பகல்பத்து உற்சவம்...

ராஜகோபால சாமி கோயிலில் நடைபெற்ற பகல் பத்து உற்சவத்தின் 8-வது நாளில், பெருமாள் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
ராஜகோபால சுவாமி கோயிலில் பகல்பத்து உற்சவம்...

திருவாரூர் | மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் பகல் பத்து 8-வது நாளில் ராஜா அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். யானை செங்கமலம் பெருமாளை மூன்று முறை சாமரசம் வீசியபடி வலம் வந்தது அதனையடுத்து.

ராஜகோபாலசுவாமி  எதிரே ஒவ்வொரு ஆழ்வாராக எழுந்தருளினர்  நம்மாழ்வார் , பூரத்தாழ்வார், பேயாழ்வார் , சேனை முதல்வர் என 12 ஆழ்வார்கள் எழுந்தருளினர் அதனைத் தொடர்ந்து 13 வதாக ஹனுமான் அவருக்கே உரித்தான வேகத்துடன் எழுந்தருளினார்.

முத்து வெளியில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆழ்வார் பெருமக்களுக்கு ராஜகோபால பெருமாள் சார்பில் தீட்சிதர்கள் மாலை அணிவித்து சடாரி மரியாதை செய்தனர்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com