கனமழை எதிரொலி... முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு...

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கனமழை எதிரொலி... முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு...

தமிழக-கேரள எல்லையில் குமுளி அருகே முல்லைப்பெரியாறு அணை உள்ளது. இந்த அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது.

இந்நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான சிவகிரி மலைத்தொடர், முல்லையாறு, முல்லைக்கொடி தாண்டிக்கொடி, ஆகிய  பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 257 கன அடியாக இருந்தது. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி இன்று அணையின் நீர்மட்டம் 138.15 அடியாக உள்ளது.

நீர்வரத்து வினாடிக்கு 830 கன அடியாக அதிகரித்தது.அணையின் நீர் இருப்பு 6659 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் வினாடிக்கு 511 கன அடியாக உள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com