சிறுத்தை புலி தாக்கி ஒருவர் படுகாயம்...

கோத்திகிரியில் சிறுத்தை புலி தாக்கி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுத்தை புலி தாக்கி ஒருவர் படுகாயம்...

நீலகிரி | கோத்தகிரி சுற்றுவட்டார் பகுதிகளில் அண்மைக்காலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக குடியிருப்பு பகுதிகளிலும் சாலைகளிலும் உலா வருகின்றன.

இந்நிலையில்  கீழ் கோத்தகிரி பறவைகாடு பகுதியில் சிதம்பரம் என்பவரின் மகன் பன்னீர்செல்வம் (33) இவர் அதிகாலையில் மாடுகளை  கொட்டகை இருந்து திறப்பதற்கு  சென்றுள்ளார்.

அப்போது திடீரென சிறுத்தை புலி ஒன்று பன்னீர்செல்வத்தை கை ,கால்  என பல்வேறு பகுதிகளை தாக்கியுள்ளது . பன்னீர் செல்வத்தின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் வந்துள்ளனர்.

சிறுத்தை புலி அருகில் உள்ள புதருக்குள் மறைந்துள்ளது பின்பு பன்னீர் செல்வத்தை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com