இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்... போராட்டக் களமாக மாறிய சுற்றுலா தளம்...

இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்... போராட்டக் களமாக மாறிய சுற்றுலா தளம்...

நீலகிரி | சுற்றுலா நகரமான நீலகிரிக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை அதிகளவு கண்டு ரசித்து செல்கின்றனர். 

அவர்களுக்காக பூங்காக்களை தயார் படுத்தும் பணியில் நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் தோட்டக்கலைதுறைக்கு சொந்தமான பண்ணைகளிலும் 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தினக்கூலியாக 400 ரூபாய் மட்டுமே பெற்று வருகின்றனர். இந்நிலையில்,

  • 480 நாட்கள் முதல் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

  • சிறப்பு காலவரை தொகுப்பு ஊதியத்தை வழங்க வேண்டும்

  • அரசாணைபடி அறிவித்த நாள் ஒன்றுக்கு 700 ரூபாய் அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும்

  • தற்காலிக ஊழியர்களை காலியாக உள்ள பண்ணை மற்றும் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான பூங்காக்களில் நிரந்தர பணியாளர்களாக பணி மாற்றம் செய்ய வேண்டும்

உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 500 க்கும் மேற்பட்ட தோட்டக்கலைத்துறை பூங்கா மற்றும் பண்ணை ஊழியர்கள் தாவரவியல் பூங்காவில்  இரண்டாவது நாளாக உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க | போராட்டக்காரர்களுக்கும், காவல் துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு...