தந்தை சடலத்தை எடுக்கும் முன்பு தேர்வு எழுத சென்ற மாணவன்...

கொடைக்கானலில் தந்தை இறந்த நிலையில் மகன் 12 வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தை சடலத்தை எடுக்கும் முன்பு தேர்வு எழுத சென்ற மாணவன்...

திண்டுக்கல் | கொடைக்கானலில் உள்ள ஆர்.சி மேல்நிலைப் பள்ளியில்  12 ஆம்  வகுப்பு படித்து வருகிறார் மாணவர் ரிபாஸ் ஆண்டனி. தற்போது தமிழக முழுக்க 12 ஆம் வகுப்பு பொது தேர்வு நடந்து வருகிறது. இந்த பொது தேர்வை ரிபாஸ் ஆண்டனியும் எழுதி வருகிறார்.

இந்நிலையில்  ரிபாஸ் ஆண்டனியின் தந்தை எட்வர்ட் கென்னடி பாபு என்பவர் உடல் நலக்குறைவு காரணமாக ஞாயிற்றுக் கிழமை, அதாவது கடந்த 26ம் தேதி இறந்த நிலையில் தனது தந்தையின் சடலத்தை வீட்டில் வைத்து விட்டு 12 ஆம் வகுப்பு பொது தேர்வை காலையில் சென்று எழுதி வந்து தந்தையின் சடலத்தை எடுத்தார் ரிபாஸ் ஆண்டனி.

கடும் சோகத்தில் பொது தேர்வு எழுதிவிட்டு தந்தையின் சடலத்தை எடுத்த நிகழ்வு கொடைக்கானலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன்பு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஊத்தங்கரை அடுத்த கல்லாவி கீழ் காலனியை சேர்ந்த ஜெகத் என்பவரும் இதே போல, தனது தந்தை இறந்த பிறகும் தேர்வெழுதியது குறிப்பிடத்தக்கது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | தந்தை இறந்தும், சோகத்தில் தேர்வை எழுதிய மாணவர்...