கொலையில் முடிந்த கில்லி... விளையாட்டு விபரீதமான கதை...
கில்லி விளையாட்டின் போது ஏற்பட்ட தகராறில், இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்பதியுள்ளது.

அரியலூர் | ஆண்டிமடம் சந்தைதோப்பு பகுதியை சேர்ந்தவர் குணசீலன். இவரும் அதே பகுதியை மார்ட்டீன்ரூபன், ஆரோக்கியதாஸ் உள்ளிட்ட நண்பர்கள் நேற்று கிட்டிபுல் விளையாடி உள்ளனர். இந்த விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் குணசீலனை, மார்ட்டீன்ரூபன் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இதில் குணசீலன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆண்டிமடம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் விசாரணை செய்து வருகின்றனர். கிட்டிபுல் விளையாட்டில் ஏற்பட்ட தகராறால் வாலிபர் கொலை செய்யபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க | கோதாவரி நதியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு...