“அரசு நீட் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது” - அமைச்சர் அன்பில் மகேஷ்

“அரசு நீட் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது” -  அமைச்சர் அன்பில் மகேஷ்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு மையம் செப்டம்பர் மாதமே  தொடங்கி விட்டதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி,

"நீட் தேர்வு பயிற்சி மையம் செப்டம்பர் மாதமே தொடங்கிவிட்டதாகவும் ஒரு புறம் சட்ட  போராட்டம் நடத்தி கொண்டு இருக்கிறோம் என்றும் கூறினார்.

மேலும், நீட் தேர்வை நிறுத்தும் வரை, ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்களால் தனியார் நிறுவனங்களில் இரண்டு லட்சம் மூன்று லட்சம் கட்டி பயிற்சி மையங்களில் படிக்க முடியாது எனவும், குழந்தைகளை வளர்த்து எடுக்கக்கூடிய பொறுப்பு உள்ளது என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசுகையில், “அரசு பள்ளி மாணவர்களிடம் கையெழுத்து வாங்குவது தப்பில்லை. எல்லோரிடத்திலும் வாங்கலாம். ஒவ்வொரு அரசாங்கத்திற்க்கும் தங்களுடை கருத்தை சொல்வதற்கு உரிமை உண்டு என்று நீதிமன்றமே சொல்லிவிட்டது",  என அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com