கோத்தகிரியில் 12 ஆம் காய்கறி கண்காட்சி...!!

கோத்தகிரியில் 12 ஆம் காய்கறி கண்காட்சி...!!

கோத்தகிரியில் 12 ஆம் காய்கறி கண்காட்சி மே மாதம் 6, 7-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை  விடுமுறை நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மே மாதங்களில் கோடை விழாக்களும் நடத்தப்படுகின்றன. இதன் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் மே மதம்  6, 7-ந் தேதிகளில் காய்கறி கண்காட்சி நடைபெற இருக்கிறது. இது 12 ஆம் ஆண்டு நடைபெறும் காய்கறி கண்காட்சியாகும்.  

கண்காட்சி நடைபெற இருப்பதை ஒட்டி சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் செயற்கை நீரூற்று உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ. 50 லட்சம் செலவில் பூங்காவை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக டிக்கெட் கவுன்டர்கள் மற்றும் 2 கடைகளும் கட்டப்பட்டுள்ளன. 
மேலும் கழிப்பிடங்கள் புதுப்பிக்கப்பட்டு சுவர்களில் வனவிலங்குகளின் ஓவியங்கள் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன. பூங்கா புதுப்பொலிவு பெற்றுள்ளதால், நடப்பாண்டில் சுற்றுலா பயணிகள் கூடுதலாக  வருகை தர கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில்  காய்கறி கண்காட்சி நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. மேலும் இந்த ஆண்டு அதிக அளவில் பூக்கள் பூத்துள்ளதால் சுற்றுலா பயணிகள் பெருமளவில் கலந்துகொள்ள  வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.