நடிகர் சூர்யாவின் படத்திற்கு ஏ சான்றிதழ்..!! 

நடிகர் சூர்யாவின் படத்திற்கு ஏ சான்றிதழ்..!! 

கோலிவுட்டின் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. பாண்டிராஜ் உடன் இணைந்து சூர்யா தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

சமூக கருத்துக்களை வெளிப்படையாக கூறி வரும் சூர்யா தற்போது ஜெய்பீம் எனும் படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தை சூர்யாவின் தனது சொந்த நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். மேலும் இப்படத்தில் குடிசை வாழ்க்கை மனிதர்களின் வாழ்க்கையை படமாக எடுக்கப்பட்டு உள்ளது.

அதாவது சூர்யா குடிசை மக்களுக்காக போராடும் ஒரு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் யாரும் பேசுவதற்கு பயந்த விஷயங்களை கூட வெளிப்படையாக சூர்யா பேசியுள்ளதாகவும். இப்படத்தில் இடம் பெற்ற வசனங்களும் காட்சிகளும் ரசிகர்களை பெரிய அளவில் யோசிக்க வைக்கும் எனவும் கூறி வருகின்றனர். மேலும் இப்படத்திற்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழ்  வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.