எனக்கு ஜாதியே வேண்டாம்பா... டுவிட்டரை கலக்கும் ஜனனி.. அப்படி என்ன செய்துவிட்டார்??

எனக்கு ஜாதியே வேண்டாம்பா... டுவிட்டரை கலக்கும் ஜனனி.. அப்படி என்ன செய்துவிட்டார்??

அப்டேட்டிலிருந்து சற்று விலகி இருந்த நடிகை ஜனனி ஐயர், தற்போது அவர் டிவிட்டரில் போட்ட சிறிய டுவிட்டால் வலைதளவாசிகள் சூடேற்றி உள்ளார். பலரும் அவரது செயலை பாராட்டி வருகின்றனர். அப்படி என்ன செய்துவிட்டார் என்று கேட்கும் பலருக்கு ஒரே ஒரு பதில் தான்..

தனது பெயருடன் இருந்த ‘ஐயர்’ என்ற பெயரை ஜனனி நீக்கிவிட்டாராம். பதிலுக்கு ‘ஜனனிஸ்ரீ’என மாற்றிக்கொண்டாராம். திரைப்படங்களில் நடிக்க வந்தபோது, தனது பெயரை ‘ஜனனி ஐயர்’என்றே குறிப்பிட்டு வந்தார் ஜனனி. ஆனால் தற்போது திடீரென அந்த சாதி பெயரை நீக்கியுள்ளார்.

அத்தனை பேரையும் அசரவைத்துள்ள அவரது டுவீட்டுக்கு விளக்கமும் கொடுத்துள்ளார். மாற்றம் ஒன்றே மாறாதது.. என்றும் ஒற்றுமையுடன்.. ஜனனி என்று அவர் போட்டுள்ள இந்த போஸ்ட் பலரது பாராட்டுக்களைக் குவித்துள்ளது. ஜனனியின் இந்த சாதி பெயர் துறப்பை பாராட்டி வரும் நிலையில், வழக்கம் போல் குறும்பு நெட்டிசன்கள் டுவீட் செய்து ஜனனியை கலாய்க்கவும் தான் செய்கின்றனர்.

சமீப காலமாக ஜாதியை சொல்லி அனுதாபம் தேடுவதும், கெத்து காட்டுவதும், பெருமை பேசிக் கொள்வதும் ஒரு பலர் ஒரு டிரெண்டாக வைத்திருக்கின்றனர். சிலர் இப்போதெல்லாம் ஜாதிப் பெருமை பேசுவதை கவுரமாக கருத ஆரம்பித்து விட்டனர்.

சாதி, இனவெறி படுகொலைகளும் அரங்கேறி தான் வருகின்றனர். சாதி பெயரை கூறி குறிப்பிட்ட சமூகத்தினர் தாழ்த்தப்பட்டு வரும் இந்த நாகரிக காலத்தில், ஜனனியின் செயல் பாராட்டுக்குரியது தான்!!