ரீ எண்டரி கொடுக்கும் சுப்ரமணியபுரம் பட நாயகி..! படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரல்..!

சினிமாவில் ரீ-எண்டரி கொடுக்கும் ஸ்வாதி..!

ரீ எண்டரி கொடுக்கும் சுப்ரமணியபுரம் பட நாயகி..! படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரல்..!
தமிழில் சசிக்குமாரின் சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்வாதி. அதில் தனது கண்விழி பாவணைகளால் ரசிகர்களை சுண்டி இழுத்தவர். கண்கள் இருந்தால் உன் கண்கள் இருந்தால் என்ற பாட்டில் இவரது நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. 

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்தவர் ஸ்வாதி. தமிழில் சுப்ரமணியபுரம் படத்தை தொடர்ந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யாக்கை போன்ற பல படங்களிலும் நடித்திருந்தார். பிறகு வாய்ப்புகள் இன்றி இருந்த ஸ்வாதி, 2018-ம் ஆண்டு இந்தோனேசியாவை சேர்ந்த விமானியான விகாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

ஏறத்தாழ இரண்டரை வருடங்களுக்கு பிறகு மீண்டும் தெலுங்கு படம் மூலம் ரீ எண்டரி கொடுக்கவிருக்கிறார் ஸ்வாதி. ஹர்ஷா புலிபகா இயக்கத்தில் உருவாகும் பஞ்சதந்திரம் என்ற தெலுங்கு படத்தில் தற்போது அவர் நடித்து வருகிறார். இப்படத்தில் ஸ்வாதியுடன் சமுத்திரகனி, நரேஷ் அகஸ்தியா, ராகுல் விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.