மீண்டும் ஜெய் பீம்!!! ஜெயிச்சிட்டோம் மாறா...விரைவில்...

மீண்டும் ஜெய் பீம்!!! ஜெயிச்சிட்டோம் மாறா...விரைவில்...

நடிகர் சூர்யா, மணிகண்டன் மற்றும் நடிகை லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் நடிப்பில் கடந்த 2021ம் வருடம் நவம்பர் மாதம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று, தேசிய விருதுகளை குவித்த திரைப்படம் "ஜெய் பீம்".

Suriya's 'Jai Bheem' is based on a 1993 legal battle | Tamil Movie News -  Times of India

மேலும் படிக்க | கலைவாணரின் பிறந்த நாள் இன்று ...மரியாதை செலுத்திய நடிகர் சங்கம்...

இயக்குனர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் "ஜெய் பீம்". இப்படமானது 1993ஆம் ஆண்டு நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான திரைப்படமாகும். இப்படத்தினை நடிகர் சூர்யா தனது '2டி என்டேர்டைன்மெண்ட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

மேலும் படிக்க | ரோபோ ஷங்கருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்...

Jai Bhim, 'ஜெய் பீம்' படத்தில் நடித்த சிறுமிக்கு நேர்ந்துள்ள கொடுமை:  விளாசும் நெட்டிசன்கள்! - suriya jai bhim child artist face the problem -  Samayam Tamil

தமிழ் மற்றும் இந்தியா திரைப்பட ரசிகர்கள் ரசித்து கொண்டாடும் வகையில் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கதிர் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். இப்படம் 2021 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 2ல் 'அமேசான் பிரைம் வீடியோ' இணையதள ஆன்லைன் ஓடிடி தளத்தில் வெளியாகி பல்வேறு விருதுகள் பெற்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.மலையடிவார மக்களுக்கு நடக்கும் அநீதியை எதிர்த்து அதிகாரிகளை கண்டித்து போராடிய வழக்கறிஞர் சந்துருவின் உண்மை கதை தான் இந்த ஜெய் பீம் திரைப்படம்.

மேலும் படிக்க |  தி காஷ்மீர் ஃபைல்ஸை கிழித்தெறிந்த நடாவ் லாபிட்.. சர்வதேச திரைப்பட விழாவில் நடந்த அவமானகர நிகழ்வு..!

Jai Bhim: Tamil Nadu CM Stalin Praises Suriya's Upcoming Film & Says It  "Made My Heart Heavy"

இந்நிலையில் சமயத்தில் கோவாவில் நடைபெற்ற 53வது சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய் பீம் இரண்டாம் பாகம் எடுக்க 2D நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளதாக, 2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.மேலும் தற்போது ஒரு படத்தின் பணிகள் நடைபெற்று வருவதாகவும்,இரண்டாம் பாகமானது முதல் பாகத்தின் தொடர்ச்சியா அல்லது வேறொரு கதையா என்பதெல்லாம் தற்போது நடைபெற்று வரும் படத்தின் பணிகள் முடிந்த பிறகு ஜெய் பீம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்தான தகவல்கள் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.