ஜெயிலர் இசை வெளியீட்டு விழா ஏற்பாடு; இளைஞர் படுகாயம்!

ஜெயிலர் இசை வெளியீட்டு விழா ஏற்பாடு;  இளைஞர் படுகாயம்!
Published on
Updated on
1 min read

ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடு பணிகளில் ஈடுபட்டு வந்த வடமாநில இளைஞர் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்துள்ளார். 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா நாளை பெரியமேட்டில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாட்டு பணிகளில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் அசாம் மாநிலத்தை பூர்விகமாக கொண்டு சென்னை அமைந்தகரையில் வசித்து வருபவர் சங்கர் மாலா(26). இவர் ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவிற்காக இன்று அதிகாலை மின்சார விளக்குகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது திடீரென சங்கர் மாலா மீது மின்சாரம் தாக்கி சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த சங்கர் மாலாவை உடனடியாக அருகிலிருந்த நபர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். காயமடைந்த சங்கர் மாலா மருத்துவமனையில்  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த சம்பவம் தொடர்பாக பெரிய மேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com