மறைந்த புனித் ராஜ்குமாரின் குடும்பத்தை நேரில் சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல்..!

’விக்ரம்’ படப்பிடிப்பிற்காக பெங்களூருவில் முகாமிட்டுள்ள கமல்..!
மறைந்த புனித் ராஜ்குமாரின் குடும்பத்தை நேரில் சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல்..!

மறைந்த புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினரை நேரில்  சந்தித்து நடிகர் கமல்ஹாசன் ஆறுதல் கூறினார். கன்னட 
சினிமாவின் பவர் ஸ்டார், அப்பு என செல்லமாக அனைவராலும் அழைக்கப்பட்ட புனித் ராஜ் கடந்த அக்டோபர் 
மாத இறுதியில் யாரும் எதிர்பாராத வண்ணம் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கன்னட திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகமே புனித் ராஜ்ஜின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தது. பல திரைப்பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் அவரது உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் படப்பிடிப்புக்காக பெங்களூரு சென்றிருந்தார். அங்கு புனித் ராஜ்குமாரின் இல்லத்திற்கு சென்று அவரது மனைவி மற்றும் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சந்திப்பின் போது நடிகர் ரமேஷ் அரவிந்தும் உடனிருந்தார். 

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com