மெட்ராஸ் டூ மெல்போர்ன்...! ஜெய்பீம் படத்தின் வெற்றி பயணம்...!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம், மெல்போர்னின் இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.

மெட்ராஸ் டூ மெல்போர்ன்...! ஜெய்பீம் படத்தின் வெற்றி பயணம்...!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம், மெல்போர்னின் இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.   

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ஜெய்பீம் திரைப்படம் 2021ம் ஆண்டு வெளியானது. படத்தில் சூர்யாவுடன் லிஜோமோல், மணிகண்டன், பிரகாஷ்ராஜ், எம்.எஸ்.பாஸ்கர் என பலர் நடித்துள்ளனர். பழங்குடியின மக்கள் மீது பொய்யான வழக்குகள் போட்டு ஒடுக்குமுறையை எதிர்த்து போராடி அவர்கள் நீதி பெற்று தரும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. 

முன்னதாக, சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம், ஜூலை 22ம் தேதி அறிவிக்கப்பட்ட68 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பில், சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் , சிறந்த நடிகருக்கான விருது, சிறந்த நடிகைக்கான விருது, சிறந்த பின்னணி இசைக்கான விருது என மொத்தம் 5 விருதுகளை பெற்றுள்ளது.  

இதே போன்ற விருதுகளை, ஜெய்பீம் திரைப்படமும் பெரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது ஜெய்பீம் திரைப்படம், வெளிநாடுகளில் நல்ல பெயரை பெற்று வருகிறது. இந்நிலையில் மெல்போர்னின் இந்திய திரைப்பட விழாவில் (IIFM) திரையிடப்பட உள்ளது.  IIFM விழாவானது, இந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ம் தேதி முதல் 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதில் திரையிடப்படும் படங்களின் பட்டியலில், ஜெய்பீம் திரைப்படம் இடம் பெற்றுள்ளது. மேலும், தி ரோட் டு குதிரையர், பெரியநாயகி மற்றும் பராசக்தி ஆகிய தமிழ் திரைப்படங்கள் இவ்விழாவில் திரையிடப்படுகின்றன.