தியேட்டர்களில் மட்டுமல்ல, ஓடிடி தளத்திலும் ரெக்கார்ட் பிரேக்! - விக்ரம் படத்தின் அடுத்த சாதனை:

உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம், பல கோடி வசூல் செய்து உலக தியேட்டர்களில் சாதனை படைத்த நிலையில், தற்போது ஓடிடி தளத்திலும், அதிக பார்வையாளகள் பெற்று சாதனைகள் படைத்து வருகிறது.

தியேட்டர்களில் மட்டுமல்ல, ஓடிடி தளத்திலும் ரெக்கார்ட் பிரேக்! - விக்ரம் படத்தின் அடுத்த சாதனை:

4 ஆண்டுகளுக்கு பிறகு கமல் ஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் 3ம் தேதி, உலக தியேட்டர்களில் வெளியான மாபெரும் வெற்றிப் படம் தான் விக்ரம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியான இந்த படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. பெரிய நட்சத்திரப் பட்டாளத்தை வைத்து இந்த படத்தை இயக்கி இருந்தார் லோகேஷ் கனகராஜ். 

படம் வெளியான ஒரு வாரத்தில், உலக அளவில் 200 கோடி ருபாய் வசூலை அள்ளியுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது. 

1986இல் வெளியான வெற்றித் திரைப்படம் விக்ரம். முற்றிலும் புதிய கோணத்தில் எதிர்காலத்திய படமாக உருவாக்கப்பட்ட அந்த படத்தில் விக்ரமாக உலக நாயகன் கமலஹாசன் நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்தை வைத்து ஒரு spin off படமாக உருவாக்கப்பட்டது தான் இந்த புதிய விக்ரம் படம். லோகி வெர்சில், அந்த விக்ரம் கதாபாத்திரத்திற்கு 60 வயதானால் எப்படி இருக்கும் என, சொல்லும் ஒரு கதையாக இது உருவாக்கப்பட்டது.

 ராஜ்கமல் ப்ரொடக்‌ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட்ஸ் மூவீஸ் நிறுவனத் தயாரிப்பில் வெளியாகிய இந்த படத்தில், கமலுடன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், நரேன், சூரியா, காளிதாஸ் ஜெயராம், மைனா நந்தினி, ஷிவானி, மகேஸ்வரி, காயத்ரி போன்ற பலரும் நடித்திருந்தனர். லோகி வெர்சாக உருவாகி இருக்கும் இந்த படம் இந்தியாவில் 100 கோடியும், உலகம் முழுவதும் 150 கோடிகளை வெறும் 3 நாட்களிலேயே குவித்ததோடு, தற்போது 500 கோடி கிளப்பில் இணைய இருக்கிறது. அனிருத் இசையமைப்பில் உருவான இந்த படத்தின் இசையும் பெரும் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒரு மாபெரும் வெற்றியை தமிழ் படம், பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து வரும் குஷி, படக்குழுவினருக்கு மட்டுமல்ல, தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் உருவாகியது என்று தான் சொல்ல வேண்டும். படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் லோகேஷுக்கு, நடிகர் கமல் லெக்சஸ் ரக காரை பரிசாக அளித்துள்ளார். அதோடு 13 உதவி இயக்குனர்களுக்கு டிவிஎஸ் அப்பச்சி RTR 160 ரக பைக்குகளையும் பரிசாக அளித்தார். மேலும் நடிகர் சூர்யாவிற்கு rolex கைக்கடிகாரத்தையும் பரிசாக அளித்தார். அதன் புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலானது. 

இந்நிலையில் தற்போது ஓடிடி தளத்திலும் வெளியாகி சாதனைகளை படைத்து வருகிறது. கடந்த ஜூலை 8ம் தேதி, ஹாட்ஸ்டார் என்ற ஓடிடி தளத்தில் வெளியாகிய நிலையில், வார இறுதிகளின் பார்வையாளர்கள் கணக்கு சாதனைகளைப் படைக்கும் அளவில் அதிகமாக இருக்கிறது. இதனால், ரசிகர்கள் படு குஷியில் ஆழ்ந்துள்ளனர். மேலும், விக்ரம் 3, கைதி 2 படங்களின் வெளியிட்டிற்காக ஆர்வமாகக் காத்து வருவதாகத் தெரிவித்து வருகின்றனர்.